Thursday, December 31, 2015

புத்தாண்டு வரட்டும்


புத்தாண்டு வரட்டும் 
வாழ்வு 
புது பொலிவு பெறட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
மனது 
புத்துணர்ச்சி கொள்ளட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
உறவில் 
புது நினைவுகள் மலரட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
தொழிலில் 
புது நிலைகள் உயரட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
வார்த்தையில் 
புதுதெளிவு பிறக்கட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
நினைவில் 
புதுவசந்தங்கள் பொழியட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
அறிவில் 
புதுசபதங்கள் பிறக்கட்டும் 
புத்தாண்டு வரட்டும் 
வாழ 
புது முயற்சிகள் தொடரட்டும் 

- செல்வா

Wednesday, December 30, 2015

அவள் – இரட்டைக்கிளவி


சலசல எனவரும் சலங்கைகள்
கலகல கவரும் பேச்சுகள்
துறுதுறு செல்லும் விழிகள்
படபட படக்கும் இமைகள்
கமகம மணக்கும் மல்லிகைகள்
மினுமினு மின்னும் கன்னம்
பளபள இருக்கும் கண்ணும்
கிளுகிளு கிளம்பும் உருவம்
சிலுசிலு அடிக்கும் காத்தும்
குடுகுடு வரும் கிழவனுக்கும்
தடதட அடிக்கும் இதயம்
தைதை தாளத்தில் மனசும்
சுடசுட நெஞ்சம் கொதிக்கும்
திபுதிபு இளையர் கூட்டம்
சரசர எண்ணிக்கை கூடும்
மசமச அவள்பின்னே நிற்கும்
வழவழ பலவும் பேசும்
திருதிரு சிலவிழிகள் பிதுங்கும்
கிறுகிறு தலையும் சுற்றும்
முணுமுணுக்கும் அவள் பெயரும்

- செல்வா
பி.கு: ஒவ்வொரு அடியிலும் இரட்டைக்கிளவி உபயோகப்படுத்தியுள்ளது

Friday, December 25, 2015

என் தொழில்



தினம் ஒரு கவிதை
தினம் ஒரு கலந்துரையாடல்
தேவை எனின் ஆழ்சிந்தனை
ஆங்காங்கே சிறு தொகுப்பு
அசர வைக்கும் பேச்சு
தரம் காட்டும் செய்கை
கம்பிர மிகும் தோரனை
மாற்றத்தை உணர்த்தும் மாற்றம்
உடனிருப்பவருடன் பின்னிய செயல்
வாரம் ஒரு கூட்டம்
வகுப்புகள் உடன் நாட்டம்

பிரிவுகள் இங்கு பல
எல்லாம் அறிந்தர் இலர்
இன்னும் பல கூறலாம்
நான் புரியும் தொழில்
புரியவில்லை...

நான் ஒரு கணிப்பொறியாளர்

Wednesday, December 23, 2015

காதல் கவியும் மனசாட்சியும்


கவி:
எட்டி பார் என் நெஞ்சத்தை.. நீ மட்டும் தெரிவாய்
கண்டும் பித்தாயிகிறேன் காணாமலும் பித்தாயிகிறேன்
கண்ணே உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்
மனசாட்சி:
என் நெஞ்சம் ஒரு கண்ணாடி.
பித்து மனம் பித்தாக மட்டும் மாறும்
எதிர்காலத்தை மட்டும் எதிர்ப்பர்க்காதே

----
கவியும் மனசாட்சியும் கவிதைப் படிக்க அதை கொஞ்சம் மாத்தி படிக்கலாமா?. கவியின் வரியை வாய்விட்டும் மனசாட்சி வரிகளை மனதிலும் படிக்கவும்

(கவி) எட்டி பார் என் நெஞ்சத்தை.. நீ மட்டும் தெரிவாய்
(மன) என் நெஞ்சம் ஒரு கண்ணாடி.
(கவி) கண்டும் பித்தாயிகிறேன் காணாமலும் பித்தாயிகிறேன்
(மன) பித்து மனம் பித்தாக மட்டும் மாறும்
(கவி) கண்ணே உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்
(மன) எதிர்காலத்தை மட்டும் எதிர்ப்பர்க்காதே


-செல்வா
பி.கு : ஒருவித்தியாசமான முயற்சி.