என்னைப்பற்றி


பெயர்:  செல்வா இலட்சுமணன்.
சென்னையில் பிறந்து பள்ளி மற்றும் கல்லூரி [பச்சையப்பன் கணிதம்(1989), சென்னை பல்கலைக்கழகம் M . C A . (1992) ] வாழ்க்கை முடித்து 1996 அமெரிக்கா வந்த ஒரு கணினி மென்பொருள் பொறியலாளன்.

கவிதைகள்  வடிப்பதென் வாடிக்கை
தமிழன்னைக்கு  அதுவேன்   காணிக்கை 
களிப்படையும் எந்தன் வாழ்க்கை
சிலநேரங்கள் அதுவே வேடிக்கை
வார்த்தை யுடயென்  ஒத்திகை
வார்த்தைகள் கட்டும் இறக்கை
எண்ணங்கள் சொல்லும் அறிக்கை
தேவைப்படும் ஆங்காங்கே தணிக்கை
சிலசமயத்தில் அடையுமதன்  இலக்கை
கவியுலகில் எனக்குமொரு இருக்கை
உள்ளது என்பதென் நம்பிக்கை

கவிகட்டும் அலங்கார சலங்கை
கவிப்பூட்டும் நல்ல கண்டிகை
அன்பர் நெஞ்சம்தரும் இணக்கை
நல்கருத்தும் எனை அணக்கை
இதயம் இனிக்கஎன்  புன்னகை
அறிவு  கொள்நல்  சூட்டிகை
பிறக்கும் படைப்பின் சஞ்சிகை
கருத்துகள் எனையேத்தும் வழிவகை

No comments:

Post a Comment