Wednesday, October 30, 2019

விளையாட்டு

விழிகள் இரண்டு கொண்டு
ஏனோ இந்த விளையாட்டு
விடைகாணத் துடிக்கும் நெஞ்சோடு

புன்னுறுவல் உதட்டில் இட்டு
ஏனோ இந்த விளையாட்டு
அலைப் பாயும் மனதோடு
மௌனம் மொழிகளில் கொண்டு
ஏனோ இந்த விளையாட்டு
மனம் ஓடுது தறிகெட்டு
ஆசைகளுடன் உந்தன் பூட்டு
ஏனோ இந்த விளையாட்டு
ஆசைமனதிற்கு தெரியுததன் புரட்டு
அசைவுகளில் சொல்லும் காதல்மெட்டு
ஏனோ இந்த விளையாட்டு
வேண்டாம் இத்தோடு நிப்பாட்டு

புன்னகை

அன்று...
பொதிந்து நின்ற உந்தன்
புன்னகைதவழ்
பொலிவு முகம்
என்றும் என் மனதின் ஓரம்
காலம் பல சென்றாலும்
கோலங்கள் பல மாறியும்
காயாததன் ஈரம்
இன்றும்.


அன்று...
பதிந்து நடந்த உன்னுடன்
பாதைகள் சிறுதூரம்
சொல்ல விளங்கா உணர்வுடன்
சிலிர்த்து சுவைத்த நேரம்
காலம் பல சென்றாலும்
கோலங்கள் பல மாறியும்
மாறாத நம் நட்பின் சாரம்
இன்றும்.

கதைகள்

உழன்று உருளும்
வாழ்வுடன் வாழ்ந்த பல
சொல்ல மறந்த கதைகள்

உளவு ரீதியாக
உள்ளம் மகிழ உண்மை சிலவுடன்
சொல்லி திரித்த கதைகள்

உயர்வை உயர்த்தி
உணர்த்த பெருமையை மட்டும்
சொல்லி திரிந்த கதைகள்

உறவை மேம்கொள்ள
உணர்வை உறுத்தியதையும்
சொல்லாமல் மறைந்த கதைகள்

கதைகள் 
வாழ்வுடன் என்றும்
பல கதைகள்