Saturday, December 31, 2022

வாழ்த்துக்கள்
=============
நாட்கள் மெல்ல மெல்ல
நகரது
புதுவருடம் வரும்போது
போன நாட்கள் ஞாபகம்
எல்லாம் வந்து போகுது
புத்தம் புது பொலிவுடன்
வரும் நாட்கள் நகர
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Wednesday, December 28, 2022

 ஆயிரம் நடக்கும்

================
கண்ணு முன்னாடி ஆயிரம் நடக்குது
ஆசையில் மனசு அலை மோதுது
தேவைகள் எல்லாம் கண்ணு தேடுது
வேண்டியது மட்டும்தான் நெஞ்சில நிக்குது
காணாது எல்லாம் மாயமாய் மறையுது
காண நினைத்து கானலாய் கறையது
கண்ணு முன்னாடி இன்னும் ஆயிரம் நடக்குது

Tuesday, October 11, 2022

சிறுதாகம்
==========
அவள் கண்ணில் குறும்புடன்
சிறுக்குறிப்பு
காதலில் காலங்கள்
காத்திருந்த அவனில்
உறங்கிருந்த உள்ளத்தால்
உன்னதக் கவியாய் படிப்பு
உதட்டின் அவள் சிறுபுன்னகை
வந்து மறைய
ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாலும்
ஆழமாறியா அவள் மனதும்
ஆங்காங்கே வந்து போகும் தளர்வும்
காலமறியாமல்
காதல் இழக்க விரும்பா மனதும்
கண்டது கானலை
கானலும் ஏனோ தணிந்தது
அவனின் சிறுதாகம்
பாலையிலும் உண்டு சோலை
என்ற நம்பிக்கையின் துடிப்புடன்

Monday, May 2, 2022

 அழகாய்

========
பார்த்தேன் தினம் வழக்கமாய்
பார்த்தாள் பார்வையின் ஓரமாய்
சென்றேன் அருகில் ஒருமனமாய்
சென்றாள் வெகு தூரமாய்
நின்றேன் எதோ அற்பமாய்
நின்றாள் மனதில் இன்றும் அழகாய்

Tuesday, April 26, 2022

 ரகமாய்

=======
தெரியாததை
தெரிந்ததாய் காட்டும் ஒரு ரகம்
தெரிந்தும்
தெரியாதென்று நடிக்கும் ஒரு ரகம்
தெரியுமா
தெரியாதாவென்று அறியாமல் ஒரு ரகம்
நாளும் ஒரு ரகம் கண்டேன்
நாளும் ஒரு ரகமாய் நின்றேன்
நானும் புரியாத ஒரு ரகமாய்

Thursday, April 21, 2022

கடந்தவை

 

கடந்தையெண்ணி
திரும்பிப் பார்த்தேன்
காலத்தைத் தாண்டி
மனத்திற்கு ஒட்டியவை
மனதை வெட்டியவை
அருகில் தெளிவாய்
மற்றைவை
ஆங்காங்கே எட்டியும்
தொலைவிலும் மங்கலாய்
கடந்தவை கடந்தவாய் ...

Monday, February 28, 2022

 புத்தக அலமாரி

=============
தூசி தட்டிப் புத்தகம்
படிக்க பழக்கத்தால்
வரிசை மாறாமல்
அழகாய் புத்தக அலமாரி
புத்தகம் படித்தப்பின் தான்
பெயர் எழுத நினைத்தால்
எந்த புத்தகத்திலும்
பெயர் எழுதாத புத்தக்ங்கள்
அழகாய் புத்தக அலமாரியில்
புத்தகம் வாங்க வேண்டும்
சிறுவயது எண்ணத்தால்
என்றோ வாங்கிய புத்தகங்கள்
இன்னும் உறங்குகின்றன
புத்தக அலமாரியில்
மின்புத்தகம் படிக்க வேண்டும்
எண்ணத்த்தால் ஆசையாய்
வாங்கிய புத்தகங்கள்
அலங்காரமாய் புத்தக அலமாரி

Friday, January 21, 2022

 

தோற்றம்
=========
ஆழ்சிந்தனையில்
எனை மறந்தேன் சில சமயம்
அது தந்த தோற்றம்
எனை மறந்த வேளையில்
சிலருக்கு நான்
சிந்தனையில் இருப்பதாக தோற்றம்
அறிவார்ந்த கேள்விகள்
சிந்தனைக்கு தூண்டுதலாக சில சமயம்
அது தந்த தோற்றம்
தேவையற்ற கேள்விகளிலும்
சிலருக்கு என்
கேள்வியில் அறிவார்த்தமிருப்பதாக தோற்றம்
தேவையறிந்து தேவைக்கு
உதவிய உவகை சில சமயம்
அது தந்த தோற்றம்
உதவாத நேரத்திலும்
சிலருக்கு நான்
உதவ இருப்பதாய் தோற்றம்

Tuesday, January 18, 2022

 

அலைக்கழிப்பு
==============
நிகழில் நில்லா அலையும் மனமும்
நிலைக்கொள்ளா எண்ணங்களும்
நினைவில் கொள்ளா தெளிவில்லா ஓட்டமும்
நிலையற்றாடும் ஆசையின் அடித்தளமும்
நித்தமும் ஏனோ எனை அலைக்கழிக்கும்

Thursday, January 6, 2022

 

வைகறை
=========
உறை முறை உடன் கொள் வரையறை
கறை மறை கட்டுக்குளில்லா வழிமுறை
நிறை குறை நினைத்து சில அக்கறை
எதிர்மறை பொய்யறை எதிர்கொள்ளா விதிமுறை
மனநிறை நெறிமுறை மனமுடன் தேர்க துறை
புதுநிறை கேள்விமுறை பதிக்க சமநிறை
வாழ்முறை நேர்நிறை உடன் விடியட்டும் வைகறை

Saturday, January 1, 2022

 

புத்தாண்டு
===========
கால கடிவாளத்தில்
ஆண்டுகள் மைல்கல்லாய்
கடந்தது கடந்ததாய்
புத்தாண்டு புதிதாய்
புத்துணர்வுடன் புதுப்பித்து
நம்பிக்கையாய்
தெளிவாய்
வீறுநடை கொள்வாய்