தோற்றம்
=========
ஆழ்சிந்தனையில்
எனை மறந்தேன் சில சமயம்
அது தந்த தோற்றம்
எனை மறந்த வேளையில்
சிலருக்கு நான்
சிந்தனையில் இருப்பதாக தோற்றம்
அறிவார்ந்த கேள்விகள்
சிந்தனைக்கு தூண்டுதலாக சில சமயம்
அது தந்த தோற்றம்
தேவையற்ற கேள்விகளிலும்
சிலருக்கு என்
கேள்வியில் அறிவார்த்தமிருப்பதாக தோற்றம்
தேவையறிந்து தேவைக்கு
உதவிய உவகை சில சமயம்
அது தந்த தோற்றம்
உதவாத நேரத்திலும்
சிலருக்கு நான்
உதவ இருப்பதாய் தோற்றம்