திறந்த புத்தகம்
============
என்றும் நான் திறந்த புத்தகம்
வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள்
சூழ்நிலைசார் கொணர்ந்த நோக்குகள்
வடித்து கொட்டிய எண்ணங்கள்
வடிவில் வந்த வார்த்தைகள்
எழுதியழித்த வரிகள்
எழுதெழுத மாறிய வரிகள்
மறைக்கக் கூடாதென்று
மறைநிலையில் உரைத்த எண்ணங்கள்
உண்மையுடன் நிறைந்த பக்கங்கள்
சில நேரங்கள் புரியாத அர்த்தங்கள்
படிக்கப்படிக்க உணர்ந்தும் அர்த்தங்கள்
ஏனோ எல்லா பக்கங்கள்
படிக்கப்பட்டவை
அங்குமிங்கும் ஒருசிலரால்
இன்னும் உள்ளது
பலரால் படிக்கா பல பக்கங்கள்
என்னை அறியாமல் நான்
எழுதிய பல பக்கங்கள்
இன்னும் எழுதாத
எத்தனை பக்கங்கள்
இருந்தும் ...
என்றும் நான் திறந்த புத்தகம்