அரசியல்வாதி
கவிதை சாரல்
Friday, February 16, 2024
Thursday, August 24, 2023
திறந்த புத்தகம்
============
என்றும் நான் திறந்த புத்தகம்
வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள்
சூழ்நிலைசார் கொணர்ந்த நோக்குகள்
வடித்து கொட்டிய எண்ணங்கள்
வடிவில் வந்த வார்த்தைகள்
எழுதியழித்த வரிகள்
எழுதெழுத மாறிய வரிகள்
மறைக்கக் கூடாதென்று
மறைநிலையில் உரைத்த எண்ணங்கள்
உண்மையுடன் நிறைந்த பக்கங்கள்
சில நேரங்கள் புரியாத அர்த்தங்கள்
படிக்கப்படிக்க உணர்ந்தும் அர்த்தங்கள்
ஏனோ எல்லா பக்கங்கள்
படிக்கப்பட்டவை
அங்குமிங்கும் ஒருசிலரால்
இன்னும் உள்ளது
பலரால் படிக்கா பல பக்கங்கள்
என்னை அறியாமல் நான்
எழுதிய பல பக்கங்கள்
இன்னும் எழுதாத
எத்தனை பக்கங்கள்
இருந்தும் ...
என்றும் நான் திறந்த புத்தகம்
Tuesday, May 23, 2023
முட்டுவாதம்
============
சமூக வலைதளத்தில்
புயலாய் பரவுது எங்கள் நாட்டில்
இந்த புதுவாதம் .. முட்டு வாதம்
நித்தம் கேட்கும் நாதம்
தர்மத்தின் வாதம் முழங்கும்
அறச்சீற்றம் அரங்கேறும்
வேண்டாதவர் தவறுகள் போது
வேண்டியவர்கள் தவறுக்காக
வேண்டாத புள்ளியில்
புய்யியல் தகவல்கள்
தவறுகளை முந்திய
தவறுகளுடன் அழகிய
அழுக்கான ஒப்பிடல்
கொள்கைகளில்
மூட்டு கழன்றவர்களின்
நித்தம் நிகழ்த்தும்
முட்டு வாதம்
Tuesday, October 11, 2022
சிறுதாகம்
==========
அவள் கண்ணில் குறும்புடன்
சிறுக்குறிப்பு
காத்திருந்த அவனில்
உறங்கிருந்த உள்ளத்தால்
உன்னதக் கவியாய் படிப்பு
உதட்டின் அவள் சிறுபுன்னகை
வந்து மறைய
ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாலும்
ஆழமாறியா அவள் மனதும்
ஆங்காங்கே வந்து போகும் தளர்வும்
காலமறியாமல்
காதல் இழக்க விரும்பா மனதும்
கண்டது கானலை
கானலும் ஏனோ தணிந்தது
அவனின் சிறுதாகம்
பாலையிலும் உண்டு சோலை
என்ற நம்பிக்கையின் துடிப்புடன்
Thursday, April 21, 2022
கடந்தவை
கடந்தையெண்ணி
திரும்பிப் பார்த்தேன்
காலத்தைத் தாண்டி
மனத்திற்கு ஒட்டியவை
மனதை வெட்டியவை
அருகில் தெளிவாய்
மற்றைவை
ஆங்காங்கே எட்டியும்
தொலைவிலும் மங்கலாய்
கடந்தவை கடந்தவாய் ...
Monday, February 28, 2022
புத்தக அலமாரி
=============
புத்தகம் படித்தப்பின் தான்
பெயர் எழுத நினைத்தால்
எந்த புத்தகத்திலும்
பெயர் எழுதாத புத்தக்ங்கள்
அழகாய் புத்தக அலமாரியில்
புத்தகம் வாங்க வேண்டும்
சிறுவயது எண்ணத்தால்
என்றோ வாங்கிய புத்தகங்கள்
இன்னும் உறங்குகின்றன
புத்தக அலமாரியில்
மின்புத்தகம் படிக்க வேண்டும்
எண்ணத்த்தால் ஆசையாய்
வாங்கிய புத்தகங்கள்
அலங்காரமாய் புத்தக அலமாரி
Subscribe to:
Comments (Atom)