நான் ஒரு சராசரி
செய்வதோ மனதில்
பட்டது சரி
பண்செய்ய
எனக்கென்று ஒரு முறை
இருந்தும் உள்ளதோ
என்னுள் சில குறை
வளர்த்தேன்
என்னுள் பல அரண்
இடையில் ஏனோ சில முரண்
காரணம் நான் ஒரு
சராசரி
செய்வதோ மனதுக்கு
பட்டது சரி
கவிதையாய்
என்னுள் அருவி சாரல்
வார்த்தையோ சில
நாள் மறையும் தூறல்
மனம் கொள்ளும்
என் ஏவல்
சில நாளோ அங்கங்கு
நல்ல தாவல்
காரணம் நான் ஒரு
சராசரி
செய்வதோ மனதில்
பட்டது சரி
மாற்றமே எந்தன்
மாறிலி
மாற்றத்தால்
என்னுள் சிலவலி
சீற்றத்தால் என்னுடன்
சில பகை
ஏற்றமோ தந்தது
நல்ல வகை
காரணம் நான் ஒரு
சராசரி
செய்வதோ மனதுக்கு
பட்டது சரி
என் மனமோ
திறந்தவெளி
இருந்தும் உள்ளதோ
சில இடைவெளி
படிக்கா என்னுள்
பல சுவடுகள்
தானாய் மறையும் சில
கவடுகள்
காரணம் நான் ஒரு
சராசரி
செய்வதோ மனதுக்கு
பட்டது சரி
ஆராயும் திறம்
கொண்ட என் மனம்
அதனுள் ஓடாமலே
ஒளியும் சில தினம்
பிறர் குறை கண்டு
செய்யும் புலம்பல்
தன் நிறைக்கு
மட்டும் வேண்டும் அலம்பல்
காரணம் நான் ஒரு
சராசரி
செய்வதோ மனதில்
பட்டது சரி
-
செல்வா
No comments:
Post a Comment