கவிதை சாரல்
Friday, December 20, 2019
கொடூர ஆசை
பழுப்பு வண்ணனே
முக்கண் உடையோனே
எந்தன் ஆசையைக் கேள்
உந்தன் குடுமி பிடித்து
மண்டையை உடைத்து
வழியும் நீர் குடித்து
உந்தன் தசையை
நறுக்கி அரைத்து
சட்னி செய்ய ஆசை
என் அருமை தேங்காயே
Tuesday, December 17, 2019
நிலவே...
நிலவே...
எங்கள் வானத்தில்
காணாததையும் கண்டதையும்
கொண்டு
தேயாத உன்னை
வளர்த்தி தேய்த்தோம்
மாறாத உன்னை
தேய்த்து வளர்த்தோம்
பாடங்கள் பல சொன்னோம்
காதலே...
எங்கள் காதல்வானில்
நிலையில்லா எண்ணங்கள்
வகையறா மாற்றங்களால்
உன்னையும் நிலவோடு
இனம் சேர்ந்தோம்
மகிழ்ந்தும் சோர்ந்தும்
கவிகள் படித்தோம்
படிப்பினையற்று நின்றோம்
Thursday, December 12, 2019
காதலும் யதார்த்தமும்
உன் நினைவிலே உள்ளம்
....................................................வாழ்வு வாழ்வதற்கே
மறந்து எனை இழந்து
....................................................என்றும் வாழும் உள்ளம்
உயிரோடு உறைந்து
....................................................காதல் பாகத்தோடு
கலந்த உள்ளம்
....................................................வாழும் என்வாழ்வு
பி.கு: இந்த கவிதை புது முயற்சி. ஒற்றைப்படை வரிகள் காதலுடன். இரட்டைப்படை வரிகள் யதார்த்தமுடன்.
காதல் வரிகள்:
உன் நினைவிலே உள்ளம்
மறந்து எனை இழந்து
உயிரோடு உறைந்து
கலந்த உள்ளம்
யதார்த்த வரிகள்:
வாழ்வு வாழ்வதற்கே
என்றும் வாழும் உள்ளம்
காதல் பாகத்தோடு
வாழும் என்வாழ்வு
Monday, December 9, 2019
டிக். டிக்.. டிக்..
என்ன சொல்ல
மெல்ல மெல்ல
மறந்து கொண்டுதான்
இருக்கிறேன்...
சுவரில் தொங்கிய
கடிகாரத்தில்
கேட்ட கேட்ட அந்த
டிக். டிக்.. டிக்...
ஓட்டத்தை சரிபார்க்க
கையிலிருந்து காதில் இட்டு
மணிக்கடிகாரத்தில்
கேட்ட கேட்ட அந்த
டிக். டிக்.. டிக்...
செல்போன்கள் மற்றும்
டிஜிட்டல் கடிகாரத்தால்....
மறந்தேன் அந்த
டிக். டிக்.. டிக்...
நாறும் மணக்கும்
பூவோடு சேர்ந்த
நாறும் மணக்கும்
எண்ணத்தில் விழுந்து
வார்த்தையில் மலர்ந்த
நல்கவியோடு இணைந்த
வாழ்வும் சுவைக்கும்
பூக்கள் மணம்
செல்லும் பாதையின் ஓரம்
செறிந்த பூக்கள் ஆயிரம்
நில்லா நிலைக்கொள்ளா நேரம்
பூக்களின் மணமோ வெகுதூரம்
காரணம்
பேனாவில் மையில்லை
எழுதவும் தாளில்லை
கவிதை எழுத முடியவில்லை
இல்லா காரணம் கண்டேன்
மடிக்கணினியில்
கவிதை வரையாது வரை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)