கனிவது காதல் என்றும்
தெளிவது நெஞ்சம் என்று
வஞ்சியுன் உள்ளம் நோக்கி
உயிரது துடிக்கும் உள்ளில்
உளமது உன்னுக் கில்லை
என்றதும் நொறுங்க வில்லை
சொல்வது கள்ளம் என்றும்
தெரியுது உருகும் உள்ளம்
மல்லிகை மணமும் வீசும்
கன்னியுன் விரியும் கூந்தல்
கனவுடன் எண்ணும் எண்ணம்
உன்னுடன் என்றும் கொஞ்சும்
சிந்தனை சிதறும் என்னுள்
சித்திரம் வரையும் கண்ணுள்
பாமரம் என்றும் வீசும்
தாமரை உன்னால் வாழ்வும்
- செல்வா
பி.கு: விளம் மா தேமா - வாய்பாடு
No comments:
Post a Comment