மயக்கத்தின் மடியிலே
தயக்கமதுக் கொள்ளாமல்
இயக்கத்தில் என்றும்
வயக்கம் இழந்து
முயக்கத்தில் முண்டி
உயக்கத்தில் உருள
கயக்கதில் நான்
மயக்கம் மதுவில் என்றும்
மயக்கம் உணர்வில் என்றும்
மயக்கம் அன்பில் என்றும்
மயக்கம் மனதில் என்றும்
மயக்கிருந்தேன் என்றும்
மயக்கம் தேவையைத் தாண்ட
மயக்கம் தேவையற்றத்தைத் தூண்ட
மயக்கம் தேவையை மறக்க
மயக்கம் தேவையில்லாமல்
மயக்கத்தின் மடியில் நான்
- செல்வா
முயக்கம் - புணர்ச்சி வயக்கம் - ஒளி உயக்கம் - துன்பம் கயக்கம் - கலக்கம்
No comments:
Post a Comment