அறிவின் ஆழமது
நிறுத்தும் காலமெது
முறையாய் கற்றாலும்
மறைவழி உணர்த்தும்
நிறைவாய் நிறுத்தும்
அறிவுரையது பட்டறிவு
பட்டால் தான் தெரியும்
பார்வைக்கு பலவை என்றாலும்
பட்டுதான் தானே அறிய
காலமும் இங்கே காணாது
உடலும் மனமும் என்றும் தேறாது
அறிவின் ஆழம் ஏற்று
பார்வைகள் பலவும் நோக்கு
பட்டதது உன்மேலோ பிறர்மீதோ
அறிவைக் கொள் பட்டறிவாய்
- செல்வா
No comments:
Post a Comment