சந்தம்:
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான
கன்னிமகள் காண என்மனமும் தேடும்
மின்மினிகள் யாவும் தொடுவானில்
அல்லிவிழி கூடும் அன்புமடி வேணும்
அள்ளித்தர யாவும் நினைவாகி
அல்லல்பட ஆசை கண்களிலும் மாற்றம்
கட்டழகி நேசம் எனையாளும்
உள்ளமது தூது கொள்ளுவது மோகப்
புன்னகையைக் காணக் கவியாகி
மெல்லவரும் பாட்டு நித்தமது கேட்டு
நெஞ்சமதில் ஆடும் விளையாட்டு
தொட்டுவிட தூவும் மல்லிகையின் வாசம்
மிஞ்சுமது நேசம் குறையாது
- செல்வா
No comments:
Post a Comment