Thursday, November 28, 2019

இன்ஜினியர் காலேஜ் குரு

தீராத காண்டு ஒண்ணு 
இன்னும் தீராத காண்டு ஒண்ணு
இருக்கா சொல்லுங்க குருவே...

சிஷ்யா...
வருஷங்கள் ஓடினாலும்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பயலுகள்
அழகான பொண்ணுங்கள
கிளாஸ்மேட்டா இருக்கிறதை
வைச்சசு செஞ்ச அலம்பலைக் கண்டு
மெக். டிபார்ட்மென்ட்  பயல்கள்
கொண்ட காண்டு
வருஷங்கள் ஓடினாலும்
நாளும் தீராத காண்டு.

தேறாதது ஒண்ணு இருக்கா
என்றும் தேறாதது ஒண்ணு
இருக்கா சொல்லுங்க குருவே...

கேளு சிஷ்யா...
அழகான பொண்ணுங்கள கூடவே
இருந்தும்
ஒண்ணும் தேத்தாத
கம்ப்யூட்டர் சயின்ஸ் பயல்கள்
தேறாத ஒண்ணு
எங்க போனாலும்
தேறாத ஒண்ணு

மாறாதது ஒண்ணு இருக்கா
என்றும் மாறாதது ஒண்ணு
இருக்கா சொல்லுங்க குருவே...

சிஷ்யா...
ஆண்டுகள் பல ஆனாலும்
லெக்ச்சர் ஆன நம் சீனியர்
ஆண்டுகள் பல ஆனாலும்
அறிவு மட்டும்
மாறாத ஒண்ணு
மாத்த நினைச்சாலும்
மாறாத ஒண்ணு

பி.கு:  நான் கண்ட இன்ஜினியர் காலேஜ் மாணவர்களிடம் பெற்றது.  நகைச்சுவையாக கொள்ளவும்.

அன்றாடப் பொருள்கள் - 4

நினைவுகள் ஒரு சட்டத்தில்
நினைக்க பல கட்டத்தில்
ஆணி அடித்தார் போல்
எல்லோர் நெஞ்சினில் ...
*
பூக்களும் குங்குமமும்
இழந்ததை நினைவு
கொள்ள
இறையாய் மனதில் கொள்ள
**
மனிதர் மட்டும் அன்றி
கடவுளும் சட்டத்திலிட்டு
எங்கள் வீட்டில்
ஆணியடித்த
புகைப்பட சட்டம் ...
****

கைக்குள் அடக்கம்
உன்னுள் பல செயல்கள்
அடக்கம்
*
கறை சில களைவாய்
சில நேரங்களில்
பூச்சும் செய்வாய்
**
குட்டையாக இருந்தாலும்
நாளும் என் முகம்
துடைக்கும் கைக்குட்டையே...
***

நீ சில நேரங்களில்
என் மான த்தைக்
காக்கும் காவலன்
*
ஒட்டிய வயிறோ
புடைத்த வயிறோ
நீயின்றி அமையாது
உடை அலங்காரம்
**
வண்ணங்கள் சிலவற்றில்
காலங்களின் சில  மாற்றத்துடன்
என்றும்  நான் அணியும்
பெல்டே ...

Tuesday, November 26, 2019

செய்கையின் திறன்

மாறும் செய்கையின் திறன் தினம்
மாறும் உடன் எந்தன் குணம்
புதிதாய் காண்பதுபோல்
தவிக்கும் மனம்
மாறும் எண்ணங்கள் ஆயிரம்
காட்டும் வாய்ப்புகள் கணக்கிலா
தருணம் காணா சில தினம்
தக்க தருணத்துடன் சில தினம்
கருத்துடன் காணும் சில தினம்
கருத்த்தைக் கருதா சில தினம்
அறிந்ததை அளக்கும் சில தினம்
அறியாததை அறியும் சில தினம்
அறிந்தும் அறியாமல் சில தினம்
சிந்தையின் சிரத்தில் சில தினம்
சிரமம் கொள்ளாமல் சில தினம்
மாறும் செய்கையின் திறன் தினம்
மாறும் உடன் எந்தன் குணம்
புதிதாய் காண்பதுபோல்
தவிக்கும் மனம்
 

ஆட்டம்

ஆடிய ஆட்டம்தான் என்ன
ஆடும் ஆட்டம்தான் என்ன
ஆடப்போகும் ஆட்டம்தான் என்ன
ஆடிக்கொண்டுதான் இருக்கிறேன்
ஆடும் ஆட்டம் அறியாமல்
ஆட்டம் கொண்டேன் இன்னும்
ஆட்டுவிப்பது எதென்றியாமல்
அடிமேல் அடிவைத்து
ஆடிக்கொண்டுதான் இருக்கிறேன்
ஆட்டம் கொள்ளாமல்

அன்றாடப் பொருள்கள் - 3

பல ஆயிரம் முறைகள்
ஏந்தினேன் உன்னால்
கோப்பைகளை..
*
நாள் மாறாமல்
எல்லா உணர்வுடன்
என்னுள் கலக்க
உதவினாய்
**
நாளும் என்
உதடோடு உறவாடும்
தேநீர் கோப்பையை...
****

பல நாட்கள்
நில்லாமல் ஓடினாய்
இருத்தும் குறையவிலலை
நம் தூரம்
*
கோடையில் நீ குளிர்
மழைக்காலத்தில்
எனை தவிர்
**
இறக்கைகள் இருந்தும்
பறக்காமல் எனக்கு
காற்று வீசும்
சுழல்காத்தாடியே...
***
கட்டுபாட்டு எல்லாம்
என் கையில்
நீ இருக்கும்வரை
*
உன்னைத் தொடாமல்
கேளிக்கை ஏதுமில்லை
எந்த வீட்டிலும்
**
நாளும் என் கையில்
விளையாடும் தொலைக்காட்சி
தொலையியக்கி (Remote Control)
***

அன்றாடப் பொருள்கள் - 2

விவரமறியும் பருவம்
முன்னே என்
கையோடு உன் மெய் சேர்த்தாய்
*
வாழ்வோடு பிணைந்து
என் அறிவை எனக்கு
அறிய செய்தாய்
**
தேர்வில் எனக்கு தோள்
கொடுத்தாய்
சில நேரங்களில்
களங்கமிலா கைகளையும்
கறைப் படுத்தினாய்
***
கால மாற்றத்தில் இன்று
என் கைகளில் சில நிமிடங்களே
ஏந்திருக்கும்
எழுதுகோலே ...
****

நீயில்லாமல் நானில்லை
உன் உறவில்லை என்றால்
எனக்கில்லை ஒரு உறக்கம்
*
உன்னோடு என் கனவு
உன்னோடு என் கவிதை
உன்னோடு என் அழுகை
**
பஞ்சான உன்மேனியை
பதம் பார்த்தும்
என் காலடியில் கிடத்தியும்
என் தலை கணம் தாங்கினாய்
***
தரையோ பட்டுமஞ்சமோ
உன் உறவே
எனக்கு உன்னதம்
****
இரவின்மடியில் மட்டுமின்றி
பகலிலும் உறக்கம்.
என் அருமை தலையணையே ...
*****

வானவில்

வண்ணச்சிதறல்கள் வானில்
இடும் கோலமாய் வானவில்
எண்ணச்சிதறல்கள் வார்த்தையில்
இடும் கோலமாய் கவிதைகள்

நேரங்கள்

திட்டமிடா மனதுடன் அலைந்து
திரியும் திடமிலா எண்ணங்கள்
திரும்பி பார்க்கையில் தெரிந்த்தது
திருடிய திட்டமிடா நேரங்கள்

திட்டமிட்ட எண்ணத்துடன் இருந்து
திருப்பிய கவனத்துடன் எண்ணங்கள்
திருத்தும் வகையில் தெரிந்த்தது
திரிந்து திரியும் நேரங்கள்

Wednesday, November 20, 2019

சுயநலம்

பிறர்நிலை உணர மறுக்க
நடுநிலை மாறும்
தன்னிலை மறக்க
தடுமாறும்
தன்னை மட்டும் நினைக்க
தடம் மாறும்
எந்நிலை உணராமல்
இடம் மாறும்
எடுத்துரைத்தால்
நிறம் மாறும்

அனுமானம்

முன்னோக்கு பார்வையில்
கருத்துக் கொள்ளும்
எந்தன் அனுமானம் இயல்பு
அனுமானத்தில் அடிப்படையில்
தானே எந்தன் அறிவு
அனுமானம் ஆழத்துடன்
ஆழங்கொள்ளும் என்றும்
அனுபவமும் அறிவின் ஆழமும்
மாற்றும் அனுமானத்தின் ஆழம்

பூரணமறியாத அனுமானத்தை
அலசி ஆராய
அனுமானத்தில் கேள்வி வர
ஆடிதான் போகும் எந்தன்
அறிவின் அடித்தளம்

அர்ச்சனைகள்

எத்தனை அர்ச்சனைகள்
எத்தனை அர்ச்சனைகள்
சொல் பேச்சு கேளாமைக்கு
அன்னையிட்ட அர்ச்சனைகள்
சொல்லாத பேச்சுக்கு
தந்தையிட்ட அர்ச்சனைகள்
கேலி பேச்சுக்கு
தமக்கைகளிட்ட அர்ச்சனைகள்
சொன்னதை செய்யாதற்கு
மனைவிடம் அர்ச்சனைகள்
சொல்லாமல் செய்த செய் கைகளுக்கு
நண்பர்களிட்ட அர்ச்சனைகள்
கல்லாகியும்
கலங்கியும்
கலக்கியும்
கலங்கியவர் கண்டு
புளாங்கிதம் கொண்டும்
காலந்தோறும் அர்ச்சனையுடன் ...

Monday, November 18, 2019

பொய்


இல்லாததை இருப்பதாயென
இருப்பதை இல்லாததென
காட்டும்
எங்கும் பரந்து
கிடங்கும்
இருப்பதே தெரியாமல்
எதிலும் கலந்து
இருக்கும்...
தருணம் வருகையில்
தாவி வரும்...
வார்த்தையில் பொய்
உருவகத்தில் பொய்முகம்
அரசியலில் சாதாரணம்
மாற்றும் எதன் தோற்றம்
தேவையில் சாதுரியம்
தேவைப்படுவோர்க்கு நம்பிக்கை
கவிதையில் அழகு
காதலுக்கு இன்பம்
தத்துவத்தில் மாயை
நன்மை பயக்குமெனின்
அடங்கும் வாய்மையில்

குறிக்கோள்


அறியாத தேவைகள்
புரியாத புதிர்கள்
தெரியாத தேடல்கள்
தெளியாத தேர்வுகள் 
இடையினில் இடரும்
நெஞ்சம்...
தேவை ஒரு குறிக்கோள்
குறிக்கோளுடன் செயல்கள்
செயலுடன் எண்ணங்கள்
எண்ணமுடன் தெளிவுகள்
தேடுகிறேன் இன்னும்...
எந்தன் குறிக்கோள்

திறந்த புத்தகம்


ஏடுகள் அதிகம் 
புரியா பல பக்கம்
இருந்தும் என் மனம்...
ஒரு திறந்த புத்தகம்
அறியாதது இங்கு அதிகம்
ஆங்காங்கே அந்தரங்கம்
சில இங்கு அடக்கம்

பக்கங்கள் சிலவுடன்  வேகம்
பக்கங்கள் சிலவுடன் சிநேகம்
பக்கங்கள் சிலவுடன் பூடகம்
பக்கங்கள் சிலவுடன் வெட்கம்
பக்கங்கள் சிலவுடன் சோகம் 
பக்கங்கள் சிலவுடன் மயக்கம்
இருந்தும் என் மனம்...
ஒரு திறந்த புத்தகம்

பக்கங்கள் எல்லாம் வித்தியாசம்
பக்கங்கள் ஒன்றொன்று மாறும்
பக்கங்கள் ஒவ்வொன்றும் புதுதுவக்கம்
பக்கங்கள் சொல்லும் நோக்கம்
பக்கங்கள் சொல்லாதா விளக்கம்
இருந்தும் என் மனம்...
ஒரு திறந்த புத்தகம்