Thursday, November 14, 2019

விளையாட்டு

தடுக்கி விழுந்தும் எழுந்தும்
எத்தனையோ விளையாட்டு
விளையாட்டாய் சில விளையாட்டு
வித்தகனாய் சில விளையாட்டு
விதியின் வழியில் சில விளையாட்டு
விதியை யறியாமல் சில விளையாட்டு
வினையாய் முடிந்த விளையாட்டு

தொடங்கும் முன்னே
முடிந்த சில விளையாட்டு
முடிந்தும்முடியா சில விளையாட்டு
முடிச்சு அவிழா சில விளையாட்டு
மூச்சுத்திணற சில விளையாட்டு
விளையாட்டுடன் வாழ்வு
மேலும் விளையாட பல விளையாட்டு

No comments:

Post a Comment