Thursday, November 14, 2019

ஒரு உலகம்

வான்தனை வளைத்து
தேன் மெல்ல தெளித்து வளர்த்த
வண்ணமிகு தோட்டமிது
எண்ணமெல்லாம் என்னுடையது
நானே ராஜா நானே மந்திரி
இட்டதே சட்டம்
இதில் தேவையில்லை தர்க்கம்
எல்லாம் எனக்கு எளிது
எடுத்து உரைப்பதற்கு அரிது

கனவுகள் என்று ஏதுமில்லை இங்கு
காலங்கள் என்னும் கட்டுக்குளில்லை
காற்றுக்கும் இங்கு வேலையில்லை
கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
காரணம் இதென் கற்பனை உலகம் ....

No comments:

Post a Comment