இல்லாததை
இருப்பதாயென
இருப்பதை
இல்லாததென
காட்டும்
எங்கும் பரந்து
கிடங்கும்
இருப்பதே
தெரியாமல்
எதிலும் கலந்து
இருக்கும்...
தருணம் வருகையில்
தாவி வரும்...
வார்த்தையில்
பொய்
உருவகத்தில்
பொய்முகம்
அரசியலில்
சாதாரணம்
மாற்றும் எதன்
தோற்றம்
தேவையில்
சாதுரியம்
தேவைப்படுவோர்க்கு
நம்பிக்கை
கவிதையில் அழகு
காதலுக்கு இன்பம்
தத்துவத்தில்
மாயை
நன்மை
பயக்குமெனின்
அடங்கும்
வாய்மையில்
No comments:
Post a Comment