Saturday, January 16, 2016

கனவுடன் ஒரு கண்ணோட்டம் - பாகம் 1


கனவுகள் பலர் பலக்கண்டுக் களித்தனர்
அதனுடன் வாழ்வின் பாதியும் கழித்தனர்
நடைமுறைப் படுத்த சிலர் திட்டமிட்டனர்
வேறு கனவுகளைப் பாதியினிலே கண்டனர்

கனவினை வெகுசிலர் வாழ்வினிலே கண்டனர்
அதற்காக கனவுகள் பாதியினை யோழித்தனர்
வாழ்வின் ஒட்டங்கள் பலவு மறிந்தனர்
கனவுகளை அதனுடன் ஒட்டவும் தெரிந்தனர்

கனவுகளுக் கிங்கில்லை என்றும் பஞ்சம்
காற்றின் வேகத்தை யதுவும் விஞ்சும்
காரியத்தில் கருத்தில் கொள்ளவும் கொஞ்சம்
இல்லையெனில் கனவுகள் மட்டும் மிஞ்சும்

கனவுகள் எண்ணத்தின் எதிரொலி யாம்
கனவின் முறை கற்பனைத் திறனளவாம்
கனவின் வேகம் ஆசையின் அளவாம்
கனவுகள் அடிமனத்தின் வெளிப் பாடாம்

கற்பனைத் திறன் புதியனப் புகுத்தும்
புதியன வாழ்வின் விட்டத்தை விரிக்கும்
கனவோ கற்பனைத் தன்னைக் கற்பிக்கும்
கனவும் வாழ்வின் விட்டத்தை விரிக்கும்

கற்பனைத் திறன்பல இங்கு வளர்த்திடுவோம்
கருத்துடன் கனவுகள் பலக் காண்போம்
வாழ்வின் குறிக்கோளை அத்துடன் இணைப்போம்
செயலாக்கும் கலைகள் பலவற்றைக் கற்போம்
(வளரும்....)

- செல்வா

பி.கு: கனவை என் பார்வையுடன் கண்ணோட்டம். இது சில பாகங்கள் பிரித்து எழுதியுள்ளேன்.

No comments:

Post a Comment