Thursday, January 14, 2016

எண்ணவோட்டம்



புதியதில்லை இதொன்றும்
புரியாத ஒன்றுடன்
புதிர்போட்டுக் கொண்டிருப்பது...

தெளியாத குழப்பத்தில்
தெற்றாத சிந்தனையில்
தெரிவுக் கொள்ளுவது ...

அறியாத உள்ளத்தில்
அடங்காத ஆசையில்
அசைப் போடுவது ...

நிலையாத எண்ணத்தில்
நிற்காத வண்ணத்தில்
நிதம் காண்பது...

ஆயிரம் எண்ணவோட்டங்கள்
ஆகக்கூடிய மனவூட்டங்கள்
ஆற்றும் கடமைகள்
ஆவல்பலவுடை என் மனமே...

- செல்வா

No comments:

Post a Comment