Monday, January 4, 2016

அவள் – அந்த கணம்



காற்றிலினியில் கரைந்தது
வார்த்தைகளின்றி வடிந்தது
என் கவிதைகள்
உன்னை கண்ட கணம்

காட்சியும் காணவில்லை
மருட்சியில் மடிந்தது
என் பார்வைகள்
உன்வேல்விழிப்  பார்த்த கணம்

சித்தமும் சிதறியது
அர்த்தமும் அழிந்தது
என் சிரிப்புகள்
உன்புன்னகை சிந்தித்த கணம்

ராகதாளம் தொலைத்தது
சுருதியற்று சுருங்கியது
என் இசைகள்
உன்சிரிப்பைக் கேட்ட கணம்

சுவையை மறைத்தது  
சுரக்க மறந்தது
என் நாக்கு
உன் அதரம் சுவைக்கும் கணம்

நிலைக்கொள்ள விடவில்லை
தாவத்தான் நினைக்குது
என் நினைவுகள்
உன்னை நினைக்கும் கணம்

-          செல்வா


No comments:

Post a Comment