காலங்கள் பல மாறாலாம்
கருத்துகள் பல மாறாலாம்
கருவிகளும் பல மாறாலாம்
கடைநிலை ஒன்றுதானே
இடைநிலையிலே இத்தனை
ஆர்பாட்டங்கள் என்றால்
கடை தேறுவது என்றோ
மயக்கங்கள் மதியென்றால்
மதி மயக்கத்தில் தான்
விதியென்று விடுவதும்
மதிக்கப்பால் என்றெண்ண
விதியை வெல்லாம் மதியால்
மதியை மதியறிந்தப் பின்
சதி சிலவும் இங்கு
மதியின் வெளிப்பாடுதானே
மதி மதியையறியா என்கில்
விதியும் விளையாடும்
சதியில் தடுமாறும்
மயக்கத்தின் மாற்றம்தான்
மிஞ்சும்.
- செல்வா
No comments:
Post a Comment