நோக்கங்கள் பல கொண்டு
ஊக்கங்கள் சரிவர கொள்ளாமல்
தாக்கங்கள் பலவற்றில் சிக்கி
தூக்கங்கள் தம்மில் மறந்து
ஏக்கங்கள் கொள்வதில் என்பயன்.
சீற்றங்கள் பல கொண்டு
மாற்றங்கள் தம்மை ஏற்ற
இறக்கங்கள் அனுபவமாய் மாற்றி
தேற்றங்கள் பல அறிந்து
ஏற்றங்கள் எளிதாய் கொள்வோம்.
திட்டங்கள் பல தீட்டி
விட்டங்கள் நம்முள் விரித்து
இட்டங்கள் நன்கு அறிந்து
சட்டங்கள் பல வகுத்து
மட்டங்கள் தன்னை உயர்த்துவோம்
இச்சங்கள் பல நினைத்து
எச்சங்கள் நம்மில் வகுத்து
நீச்சங்கள் எல்லாம் நீக்கி
மச்சங்கள் உடையவராய் எண்
உச்சங்கள் எளிதில் அடைவோம்.
- செல்வா
No comments:
Post a Comment