Saturday, January 2, 2016

நினைவு


காலமெல்லாம் என்னுடன் நீ
என்ற நினைவினில் நான்
காணும் கற்பனைகள் ஆயிரம்
கவிதையாய் வடிந்தன தினம்

உன் நினைவு பூங்காவில்
என் உலா எண்ணிகையில்
பூத்தன பூக்கள் நெஞ்சில்
மாலையாய் தொடுத்தன கவிதையில்

மனம் உன்னை நினைக்கையில்
உள்ளத்தில் நினைவு ஊற்று
என்னுள் உன்னை யெற்றி
அது தரும் ஆயிரம் பாட்டு.

- செல்வா

No comments:

Post a Comment