Tuesday, January 19, 2016

நான் வணங்கும் கடவுள்




கருத்தும் உன்னால் உருபெறும்
கருத்தும் உன்னால் உருமாறும்
கருத்தும் உன்னால் களையும்
கருத்தின் கருத்தே நீயும்

உன்னோடு பல ஓட்டம்
உன்னாலே பல மாற்றம்
உன்னாலே பல காயங்கள்
உன்னாலே பல மருந்துகள்

கடந்தபின் புரியா நிற்போம்
எதிர்வருவா யென ஏங்குவோம்
உடனிருக்க அறியா திருப்போம்
உரைப்பேன் உன்னை என்றும்

கடக்க மூடியா கருப்பொருளே..
மனத்தில் உனை நிறுத்துவேன்
கைக்கூப்பி வணங்குவேன் - காலமே
நான் வணங்கும் கடவுள்


- செல்வா

No comments:

Post a Comment