சந்தேகம் மேலோங்க எண்ணம் தாழும்
சந்தோசம் திண்டாடும் உன்னுள் நாளும்
போராட்டம் கும்மாளம் போடும் உன்னை
கைப்பற்றும் சந்தர்ப்பம் தாரா மல்லே.
ஆர்ப்பாட்டம் ஆதிக்கம் கொள்ள ஆடும்
ஆனந்தம் ஆட்டம்தான் காணும் மெல்ல
உட்பக்கம் உண்டாகும் இன்னா தன்மை
ஆதங்கம் உத்வேகம் கொள்ளும் உன்னுள்.
- செல்வா
பி.கு: கலிவிருத்தம் வகையில் தேமாங்காய்+தேமாங்காய்+தேமா+தேமா ஆசையின் அடிப்படையில் எழுதியுள்ளேன்.
சந் தே கம் மே லோங் க எண் ணம் தா ழும்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
சந் தோ சம் திண் டா டும் உன் னுள் நா ளும்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
போ ராட் டம் கும் மா ளம் போ டும் உன் னை
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
கைப் பற் றும் சந் தர்ப் பம் தா ரா மல் லே
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
ஆர்ப் பாட் டம் ஆ திக் கம் கொள் ள ஆ டும்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
ஆ னந் தம் ஆட் டம் தான் கா ணும் மெல் ல
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
உட் பக் கம் உண் டா கும் இன் னா தன் மை
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
ஆ தங் கம் உத் வே கம் கொள் ளும் உன் னுள்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா
No comments:
Post a Comment