Sunday, January 3, 2016

கலவைகள்


அள்ள குறையா ஆசைகள்
மெல்ல எகிறும் தேவைகள்
சொல்ல இயலா குறிக்கோள்கள்
சொல்லில் அடங்கா கனவுகள்
எல்லாம் எனை மாற்றும் கலவைகள்

வெல்ல கொள்ள நோக்கங்கள்
வேகம் செல்ல ஊக்கங்கள்
சொல்ல சொல்ல ஏக்கங்கள்
நாளும் அதன் தாக்கங்கள்
எல்லாம் எனை மாற்றும் கலவைகள்

நித்தம் பயிலும் பயிற்சிகள்
மாற்றும் வாழ்வின் சுழற்சிகள்
கொள்ளும் பல நல்முயற்சிகள்
தடை கொள்ள துடிக்கும் அயர்ச்சிகள்
வாழ்வை ஏற்றும் உயர்ச்சிகள்
எல்லாம் எனை மாற்றும் கலவைகள்

வாழ்வாதார‌ வியாபார தரகுகள்
பறக்க துடிக்கும் சிறகுகள்
இணையாய் நடக்கும் நிகழ்வுகள்
சமம் கொள்ளும் நிரவுகள்
எல்லாம் எனை மாற்றும் கலவைகள்

- செல்வா 

No comments:

Post a Comment