எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
நானென்ன ரொம்ப லேசா
திறமை வளர்ப்பேன் மூச்சா
அதையாக்குவேன் நல்ல பைசா
நாலும் உனக்கு தெரியவேணா
நல்லதா ஆளும் தெரியும்னா
இல்லான ஒண்ணுக்குமுதவாத காலணா
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
பட்டமும் வேணுமென் பின்னாடி
பகட்டும் கொள்ளுமேன் அங்காடி
பலநாள் நானுமொரு அடிபொடி
அறிவூற்று எந்தன் பேச்சு
அங்கங்கு அணியும்சில மண்ப்பூச்சு
அதிலில்லாமல் அவிழாதென் முடிச்சு
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
மடை உடையாதென் எண்ணம்
மடமை கண்டுக்கொள்ளாதென் வண்ணம்
மற்றவருக்கு பணிபுரியும் ஆகரணம் (ஆகரணம் = ஏவலன்)
நானும் இங்கே வல்லவன்
நாளும் இருந்தும் இல்லாதவன்
நல்லதும் கெட்டதும் சொல்லாதவன்
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
- செல்வா
பி.கு: அமெரிக்காவில் Independent Consultant அல்லது Self-employed வேலை செய்பவரின் நிலை மனதில் நிறுத்தியதில் வந்த கவிதை. பல விசயங்கள் தெரித்தும் அவர்கள் அது தெரியாதவரிடம் வேலை செய்யும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment