1. நீரடித்து நீர் விலகா போல் உன் நினைவுகள்
ஒன்றுடன் ஒன்று இன்று என் நெஞ்சில்
2. உன்னுடனிருந்த ஒவ்வொரு தருணப் பூக்கள்
மாலையாய் தொடுத்தன எந்தன் காதல் நூலில்
3. தடுமாறும் என் ஒவ்வொரு செய்கையும்
தொட்டும் தொடாமலும் தொடரும் உன் நினைக்கையும்
4. படியா என் எண்ணத்தை படித்தாய்
படிந்த நினைவாய் என் நெஞ்சில் கரைந்தாய்
5. வரையும் ஓவியனாய் உன்னுடன் இருந்த நேரம்
வரைந்த ஓவியத்தை ரசிக்கும் கவிஞனாக உன் நினைவில்
6. பகல் வேடம் அணிந்தேனே... பாவி
உன் நினைவுகளால்
7. மறதி நன்று என்று உணர்ந்த்தேன்
என் மற்ற அன்றாட பணிச் செய்ய
8. கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிப்பாடும்
உன் காதலில் என் கவியும்
9. இருளில் ஆந்தைப் போல்
உன்னைக் கண்டேன் என் மன இருளில்
10. உன் நினைவுப் பூக்கள் பூக்கும் ஓசை
காதில் ஒலிக்கும் இடி ஓசை
11. மன்றம் ஏறும் உன் நினைவுகள்
என் கவிதையில்
- செல்வா
பி.கு: கஜல் வகையில் எழுதும் சிறு முயற்சி
No comments:
Post a Comment