இன்பம் கலந்த
துன்பமப்பா
துன்பம் கலந்த
இன்பமப்பா
இரண்டும் கலந்தது
அது காதலப்பா
இதில் ஒருதலை
காதலும் தப்பா.
ஏற்கா ஒருதலை
வகையென்று
சொல்லா ஒருதலை
என்றோன்று
சொல்லா ஒருதலை
தோல்வியன்று
வெல்லா காதலில்
அதுவுமொன்று
ஏற்கா ஒருதலை
காதல் தோல்வியே
உன்னை
சுட்டெரிக்கும் வேள்வியே
உன்னில்
உன்னைப்பிரிக்கும் இடைவெளியே
இதற்கு
தேவையில்லை கேள்வியே
தோல்வியது
என்றுமொரு மனநிலை
உன்மனமில்லை
அதற்கான விலை
உன்வாழ்வை
ஆக்காதே பாலை
காதலுக்கு
செய்யாதே பழிவேலை
- செல்வா
பி.கு: ஒருதலை காதல் இன்பமா அல்லது காதல் தோல்வியா என்ற கேள்விக்கு என் கருத்து.
No comments:
Post a Comment