உன்மடிதனியில் எனக்கு மயக்கம்
தலைக் கொள்ளும் கிறக்கம்
கண்கள் மறந்தடி உறக்கம்
நான் காணும் சிறுசொர்க்கம்.
இதழுடன் இதழ்கண்ட நல்சுவை
நெஞ்சில் என்றுமது நிலுவை
காதல் உறுதிப்படும் கலவை
பலநாள் செய்யும் மூளைச்சலவை
உன்னில் நான்கண்ட பரிசம்
நாளும் இனித்திடும் பழரசம்
சொல்ல இயலா பரவசம்
என்காதல் என்றும் உன்வசம்
நாடும் என்றுமுன் சந்திப்பு
வாழ்வில் வேண்டும் களிப்பு
மனங்கள் கொள்ளட்டும் கலப்பு
அதுதான் காதலின் சிறுசேமிப்பு
உன்னுடன் போகவேண்டும் சிற்றுலா
எந்த நண்பர்கள் இணைப்பில்லா
ரசிக்க வேண்டும் வெண்ணிலா
காதலின் சுவையோ வேர்ப்பலா
- செல்வா
பி.கு: வஞ்சி விருத்தத்தில் அமைந்த கவிதை
No comments:
Post a Comment