Saturday, January 30, 2016

ஆசைமனம்


அங்குமிங்கும் அலைப்பாயும் ஆசைமனம்
உன்வரவை என்றும் எதிர்நோக்கி
தத்தி தாவுது எந்தன் இளமனசு
நல்லதான் கட்டிப் போடுது உன் பார்வை .

உன்னுதட்டில் உதிக்குது சின்ன அரும்பு
என் எண்ணத்தைத் தினம் கடிக்கிற எறும்பு

அட்டைப் போல ஒட்டிக்குது உன்னுருவம்
மெல்லத்தான் உறிஞ்சுது என் நினைப்பை
சொல்லத்தான் சொல்லுது என்காதலை

சிட்டுப்போல பறக்கிற
சட்டென மறையற
கொட்டுன கொட்ற தேனீப்போல
பட்டென தொலைத்தது என் நெஞ்சம்

- செல்வா

No comments:

Post a Comment