யதார்த்தத்தை யறியாது
..........உணர்வுமிகு உலகம்
பாசத்தைப் பகிரும்
..........உணர்வுமிகு உலகம்
எதற்கு மசையா
..........உணர்வற்ற உலகம்
உறவை யுணராது
..........உணர்வற்ற உலகம்
ஆடம்பரத்தி லாடும்
..........ஆசைமிகு உலகம்
அறிவைத் தவிர்க்கும்
..........ஆசைமிகு உலகம்
அர்த்தங் கொள்ளாது
..........அறமற்ற உலகம்
அன்பை யறுக்கும்
..........அறமற்ற உலகம்
எல்லாம் கேட்கும்
..........சுயநலமிகு உலகம்
தியாகத்தை மறக்கும்
..........சுயநலமிகு உலகம்
எதையும் நம்பும்
..........ஏமாளிமிகு உலகம்
எங்கும் ஏமாறும்
..........ஏமாளிமிகு உலகம்
எளிதில் ஏற்காது
..........மூடர்மிகு உலகம்
அறிவைக் கொல்லும்
..........மூடர்மிகு உலகம்
எதுவும் எடுப்படும்
..........பகுத்தறியாத உலகம்
பட்டும் புரியாது
..........பகுத்தறியாத உலகம்
எல்லாம் கிடைக்கும்
..........வியாபார உலகம்
இல்லாததையும் விற்கும்
..........வியாபார உலகம்
புறழகைப் புகழும்
.......... பகட்டு உலகம்
உள்ளதை மறைக்கும்
.......... பகட்டு உலகம்
சொல்லி லடங்கா
.......... செவிடர்மிகு உலகம்
சொல்லும் பயன்தாராது
.......... செவிடர்மிகு உலகம்
திறனை யறியும்
.......... பொறாமை யுலகம்
திறமையைத் தவிர்க்கும்
.......... பொறாமை யுலகம்
எடுப்பதில் சிறந்தது
.......... திருட்டு உலகம்
திருந்தச் செய்யவிடாது
.......... திருட்டு உலகம்
சிறுதைப் பெரிதாக்கும்
.......... காதல் உலகம்
மயக்கத்தில் மயக்கிருக்கும்
.......... காதல் உலகம்
கோபங் கொள்ளும்
.......... வெறுப்புமிகு உலகம்
ஈகையேதும் ஈயாது
.......... வெறுப்புமிகு உலகம்
ஆசையில் ஆடும்
.......... அவலமுடை உலகம்
அக்கறைக் கொள்ளாது
.......... அவலமுடை உலகம்
கனவும் கருத்தரிக்கும்
.......... நித்திரை யுலகம்
நினைவில் ஒவ்வாது
.......... நித்திரை யுலகம்
தர்க்கம் தடையும்
.......... அன்பு உலகம்
தத்துவத்தில் கொள்ளாது
.......... அன்பு உலகம்
எங்கள் கோணிப்பையில்
.......... ஒருக்கோடி யுலகம்
ஒருக்கோட்டில் அடையாது
.......... எங்கள் உலகம்
- செல்வா
No comments:
Post a Comment