அறிவின் சமநிலை உணர்வின் சுமுகம்
உணர்வில் சமநிலை உறவின் சுமுகம்
உறவில் சமநிலை இல்லறத்தின் சுமுகம்
இல்லறத்தில் சமநிலை நல்லறத்தின் நடப்பு
அறிவின் சமநிலை உயர்வின் சுமுகம்
உயர்வில் சமநிலை பணிவின் சுமுகம்
பணிவில் சமநிலை மதிப்பின் சுமுகம்
மதிப்பில் சமநிலை பண்பாட்டின் திகழ்வு
உணர்வின் சமநிலை வெளிபாடில் சுமுகம்
வெளிபாடின் சமநிலை நட்பின் சுமுகம்
நட்பில் சமநிலை சமுகத்தின் சுமுகம்
சமுகத்தில் சமநிலை நல்லுலகத்தின் உயர்வு
.
உறவில் சமநிலை அன்பின் சுமுகம்
அன்பில் சமநிலை அறத்தின் சுமுகம்
அறத்தில் சமநிலை பண்பின் சுமுகம்
பண்பில் சமநிலை மனிதத்துவத்தின் படிப்பு.
- செல்வா
No comments:
Post a Comment